மனுவில் கையெழுத்திடவும்ஒற்றை பெற்றோர்களுக்கும் வீடு தேவை

1. இந்நகலை கையொப்பமிட்டவர்களில் ஒற்றை பெற்றோர் (முந்தைய அல்லது தற்பொழுது), அவர்களின் குழந்தைகள், அவர்களை ஆதரிப்போர் அடங்குவர். ஒற்றை பெற்றோரின் குடும்பங்களுக்கு நிலையான மற்றும் மலிவான வீடுகளை நியாயமான அணுகு முறையில் பெற வீடு கொள்கைகளை சீர்திருத்துமாறு நாங்கள் சிங்கப்பூர் அரசாங்கத்தை வலியுறுத்துகின்றோம்.


2. எங்களை போன்ற திருமணம் ஆகாத, விவாகரத்து பெற்ற, விதவை, கணவன் சிறையிலடப்பட்ட, அல்லது கணவனால் கை விடப்பட்ட பெற்றோர்களுக்கு, தற்பொழுது உள்ள கொள்கைகள் அசௌகரித்தையும் மற்றும் இல்லல்களையும் ஏற்படுத்துகின்றன. எங்களது குழந்தைகள் வளர்வதற்கு நிலையான மற்றும் போதிய இட வசதி உள்ள வீடுகள் தேவை. திருமணமான தம்பதியர்களை ஆதரிக்கும் சிக்கலான விதிகள், எங்களை நீண்ட காத்திருத்தல், அடிக்கடி மனை மாற்றம் செய்ய நேர்தல், இடநெருக்கடி, குடும்ப உறவுகளில் பாதிப்பு, நிதி பற்றாக்குறை, மற்றும் மன அழுத்தத்திற்கு ஆளாக்குகிறது.


3. தற்போது உள்ள முறையீடுகளின் அமைப்பு முறை, பெரும்பான்மையினரின் தேவைகளை பூர்த்தி செய்ய இயலவில்லை. விதிகளையும் அமைப்பையும் உள்ளடக்கிய முறையீடாக உருவாக்க நாங்கள் கீழ்கண்ட மாற்றங்களை செய்யுமாறு வலியுறுத்துகிறோம்.


பொது வாடகை வீடுகளுக்கான வருமான வரம்பை உயர்த்தி தலா-வருமான (per-capita) அடிப்படையில் தொகுத்தல். தற்பொழுது பொது வாடகை வீட்டிற்கு விண்ணப்பிக்க குடும்பத்தின் வருமானம் $ 1,500 க்கு கீழ் இருக்க வேண்டும். ஒன்று அல்லது ஒன்றுக்கு மேற்பட்ட குழந்தைகள் உள்ள பெற்றோருக்கு மேற்கொண்ட நிலை யதார்த்தத்திற்கு முற்பட்டதாக உள்ளது. நமது குழந்தைகளின் நல்வாழ்விற்கு நிலையான வீடா அல்லது சிறந்த வருமானமா என்ற தேர்வின் கட்டாயத்திற்கு தள்ளப்பட கூடாது.


குழந்தை பராமரிப்பை முழுதாகவோ அல்லது பகிர்ந்து கொண்ட விவாகரத்து பெற்ற பெற்றோர், தங்களது திருமண வீட்டை விற்ற உடனே, பொது வீடுகளை மானியத்தில் வாங்க அல்லது வாடகைக்கு பெற அனுமதித்தல். அதாவது முப்பது மாத வாடகை தடையையும் மூன்று வருட வாங்கும் தடையையும் நீக்க வேண்டும். மேலும் விவகாரத்தின் இறுதி தீர்ப்பின் நீண்ட காத்திருத்தலுக்கு பிறகு தான் அவர்களால் விண்ணப்பிக்க முடியும். நாங்களும் எங்களது குழந்தைகளும், ஒரு நிலையான வாழ்க்கை வாழ, புது வீடுகளை விரைவாக பெற, வழிகள் தேவையே தவிர கால தாமதம், ஸ்திரமின்மை மற்றும் நிதி பற்றாக்குறை ஆகியவற்றை விதிக்கும் விதிகள் தேவை இல்லை.

திருமணமாகாத தாய்மார்களுக்கு அவரது குழந்தைகளுடன் குடும்பத்தை தொடக்க வீடமைப்பு வளர்ச்சி கழக (HDB) வீடுகளுக்கு விண்ணப்பிக்க அனுமதித்தல். தற்பொழுது ஒற்றையர் திட்டத்தில் முப்பத்து ஐந்து வயதிற்கு மேற்பட்டவர்களே வீடுகளை வாங்க முடியும். அதிலும் சிறிய மற்றும் மிக குறைவான மானிய வீடுகளே வாங்க முடியும்.

வீடு பெரும் தகுதி பற்றிய தகவல்களை தெளிவாகவும் எளிமையாகவும் அமைத்தல். வீடமைப்பு வளர்ச்சி கழகத்தின் இணைய தளத்தில் பதிவாகும் வெவ்வேறு திட்டங்கள், அவற்றின் விதிகள், சலுகைகள், மற்றும் தகுதிகள் பற்றிய தகவல்களை புரிந்து கொள்ளவது கடினமாக உள்ளன. நிறைய கேள்விகளுக்கு இணைய தளத்தில் விடைகள் அளிக்கப்படவில்லை. மேலும் வரவேற்பு அதிகாரிகள் தேர்வுகளை பற்றிய தெளிவான விளக்கங்களை செயல்திறனுடன் அளிப்பதில்லை. வீடமைப்பு வளர்ச்சி கழகமும் தனது ஒவ்வொரு தனிப்பட்ட வழக்கை எவ்வாறு அணுகுகிறது என்பதை தெளிவாக வெளிப்படுத்த வேண்டும்.

ஒற்றை பெற்றோர் குடும்ப சேவைகளை ஒருங்கிணைக்க ஒரு சிறப்பு நிலையத்தை உருவாக்குதல் மற்றும் தனிப்பட்ட வழக்கின் தீர்வுகளில் நேரடி முறையீட்டின் சார்பை குறைத்தல். இது ஒரு குழப்பமான, மன அழுத்தத்தை தரும், திறனற்ற, வெற்றிக்கு உத்தரவாதமில்லாத பல்திசை (சமூக சேவகர், பாராளுமன்ற உறுப்பினர்) முயற்சி. பொது வீடுகளுக்கான பொறுப்பு வீடமைப்பு வளர்ச்சி கழகத்திடம் உள்ளதால் பெரும்பாலான வழக்குகளை அவர்களின் நேரடி ஆதரவு மற்றும் ஆலோசனையுடன் தீர்வு காண வேண்டுமே தவிர சமூக சேவகர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்களின் பரிந்துரையின் மூலம் அல்ல.


பிரதம மந்திரி, தேசிய அபிவிருத்தி அமைச்சர் மேலும் சமூக மற்றும் குடும்ப வளர்ச்சிக்கான அமைச்சர் இவர்களுக்கு அனுப்ப இருக்கும் மின் அஞ்சலில் தங்களிடம் பெற்ற பெயர் மற்றும் அடையாள அட்டை எண்ணையும் சேர்க்கவிற்கின்றோம். AWARE (இந்த மனுவின் அமைப்பாளர்கள்) உங்களது அடையாள அட்டையின் எண்களை கேட்பதன் மூலம் ஒவ்வொரு கையொப்பமும் ஒரு உண்மையான நபரை சார்ந்தது என்பதை உறுதி செய்யவும், அதனால் நமது மனு அரசாங்கத்திடம் கூடுதல் செல்வாக்கு உடையதாக அமைவதற்கும் வழி வகுக்கும்.

உங்களின் அல்லது உங்கள் பெற்றோர்களின் திருமண நிலை பற்றிய தகவல்கள் ரகசியமாக கையாளப்படும். மேலும் AWARE இத்தகவல்களை இம்மனுவில் கையெழுத்திட்டு பங்கேற்றவர்களின் மக்கள் தொகை விவர ஆய்வு கணக்கை புரிந்து கொள்ளுவதற்கு மட்டுமே பயன்படுத்துவர். சேகரிக்கப்பட்ட அனைத்து தகவல்களும் எங்கும் பகிரங்கமாக வெளியிடப்படாது.
Sign in to Google to save your progress. Learn more
முழு பெயர் *
அடையாள அட்டை எண் (NRIC / FIN) *
நீங்கள் ஒற்றை பெற்றோராக (முந்தைய அல்லது தற்பொழுது) இருந்தால் குறிக்கவும் (திருமணம் ஆகாத, விவாகரத்து செய்த, விதவை, கணவனால் கை விடப்பட்ட குடும்பம்...) *
Required
நீங்கள் ஒற்றை பெற்றோரரின்  குழந்தையாக (முந்தைய அல்லது தற்பொழுது) இருந்தால் குறிக்கவும் *
Required
மின்னஞ்சல் முகவரி *
Submit
Clear form
Never submit passwords through Google Forms.
This form was created inside of Association of Women for Action & Research. Report Abuse